×

ஸ்ரீவிகாசா மெட்ரிக் பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

உத்தமபாளையம், மே 10: உத்தமபாளையம்  விகாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் அணைவரும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி இப்பள்ளி மாணவி பரணி 578 மதிப்பெண்களும், நான்கு பாடங்களில் 100 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் மாணவி தனுஷா 578 மதிப்பெண்களுடன் உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் மூன்றாமிடம் பெற்று பள்ளி பெருமை சேர்த்துள்ளார். இதையடுத்து பள்ளி அளவில் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் இந்திரா, செயலர் உதயகுமார், நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, முதல்வர்கள் குமரேசன், அவிலா தெரசா மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

The post ஸ்ரீவிகாசா மெட்ரிக் பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Srivikasa Matriculation School ,Uttamapalayam ,Vikasa Vidyalaya Matric Higher Secondary School ,Bharani ,
× RELATED உத்தமபாளையம் அருகே போர்வெல்...